ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் உள்ளிட்டோர் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்ட வழக்குகள், முறைகேடாக இ-பாஸ் பெற்ற வழக்குகள், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.