செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசாமி, பயணச்சீட்டு வாங்குவதில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பில் முடிய, போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் பெருமாள் மயங்கி விழுந்துள்ளார்.
மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு பெருமாள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போதை ஆசாமியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.