கொரோனா தொற்று என்ற சோதனையான நேரத்தில் சொத்து வரி உயர்த்தியது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை வரிகளை உயர்த்துவது மக்களை மேலும் பாதிக்கும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள மெய்யனூர் பகுதியில் அதிமுக சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலினே நினைத்தாலும் எந்தத் தொழிலையும் அனுமதிக்க முடியாது என்றார்.