தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நூல் விலை கடும் உயர்வால் கைத்தறி, விசைத்தறி மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நெசவுத் தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க, நூல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.