தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பதவி உயர்வு வாங்கிய 7 பேரின் சான்றிதழ்களை ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியரல்லா பணியாளர்களாக பணியாற்றும் 7 பேர், தட்டச்சுத் தேர்வு எழுதி தேர்வானதாக போலிச் சான்று சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அவர்களுக்கு உதவிய தனியார் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.