திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மர்ம பொருள் வெடித்ததில் வளர்ப்பு நாய் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.
புன்னை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா, நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற போது அவரை தொடர்ந்து அவர் வளர்த்த வந்த நாயும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டதாகவும், திரும்பி பார்த்தபோது நாய் தலை சிதறி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார், காட்டுப்பன்றியை விரட்ட வைக்கப்படும் அவுட்டுக்காய் என்னும் வெடிமருந்தை கடித்ததில் நாய் உயிரிழந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.