புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் பணிகளுக்கு அலுவல் மொழிகள் பயன்படுத்துவது தொடர்பாக ஜிப்மரின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நோயாளிகளுக்கான மொழி பரிமாற்றங்கள் அனைத்தும் உள்ளூர் மொழியில் பயன்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜிப்மர் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலுவல் மொழிக்கொள்கையின்படி பெயர் மற்றும் அடையாளப் பலகைகள் மத்திய அரசாங்கத்தினால் பொதுமக்களின் தகவலுக்காக உள்ளூர் மொழியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவல் தொடர்பான விவகாரஙகள் குறித்த கடிதங்கள் ஹிந்தியில் தொடரப்படும் என்றும் இது ஒன்றும் புதிது அல்ல, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.