தமிழ்நாட்டிற்கு பல நல்ல மக்கள் நலந்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி தந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது அனைத்து மாநிலங்களுக்குமாக ஜிஎஸ்டியில் 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது என்றும், இது விரைவில் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் பணம் தரவில்லை என கூறுவது தவறான வாதம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி க்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனை செய்யும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.