தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒவ்வாமையால் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த கடையை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வரும் 3 மாணவர்கள் நேற்றிரவு பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் லீஃப் என்ற துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் விடுதிக்கு சென்ற அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மூச்சுத்திணறல் பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா, இன்று அந்த கடையை ஆய்வு செய்த போது கெட்டுப்போன கறி பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, உடனடியாக அந்த கடை உட்பட அதன் 3 கிளை கடைகளையும் மூட உத்தரவிட்டார்.