சென்னையில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலையிலும் தந்தையின் உதவியுடன் வந்து பொதுத் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல், தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் வாலிபால் ஆட வேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்குமென அவர் தெரிவித்துள்ளார்.