தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய சூறை காற்று வீசியதால் பப்பாளி மற்றும் வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குதிரைகுளம், ஜம்புளிங்கபுரம், சில்லாங்குளம்,பரமன் பச்சேரி நாகம்பட்டி, தீத்தாம்பட்டி, மேலமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, பருத்தி, பப்பாளி பழம், எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.