கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மதுரையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுமார் 10 கிலோ கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, 5 கடைகளில் கெட்டுபோன சிக்கன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள், விளக்கம் கேட்டு அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், ரசாயனம் கலந்த கலர் பொடிகளை உணவில் பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.