வணிகர்கள் உயிரிழக்க நேரிட்டால், நலவாரியம் சார்பில் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு நிதி ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற 39ஆவது வணிகர்கள் தின மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வரிகளின் நலனும் காக்கப்படும் என்றார்.