கோவையில் மது குடித்துவிட்டு பேருந்து ஒட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காந்திபுரத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்ற பேருந்தை ஓட்டிய ரகு என்ற அந்த ஓட்டுநர் துடியலூர் அருகே சென்ற போது முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மது அருந்திவிட்டு பேருந்தை ஓட்டி வந்ததை அறிந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அரசு பேருந்தை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநர் ரகு மீது வழக்கு பதிவு செய்தனர்.