திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, ரயில் தண்டவாளத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விண்ணமங்கலம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில் தண்டவாளத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அவ்வழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விண்ணமங்கலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.
இவ்வழியாக செல்லும் 5க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயரழுத்த மின்கம்பி சரி செய்யப்பட்ட நிலையில், ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.