தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பட்டுக்கோட்டை நகரில் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, சின்னையா தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அதன் காரணமாக பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், 2 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது, கூடுதல் அவகாசம் தராமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக எதிர்ப்பு தெரிவித்து, சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,