தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்குப் பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக வரும் 22-ந் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவெப்பார் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசத்துக்கு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தினார்.
காங்கிரசின் செல்வப் பெருந்தகை பேசும்போது, மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வுக்குத் தடை விதித்தது சரிதான் என்றும், 18 ஆதீனங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாமகவின் ஜி.கே.மணி, பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்குத் தடை விதித்துள்ளது தவறானது எனக் கூறியதுடன், அதை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.