விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்தாளம்பட்டியில் பெரிய கருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று காலை பட்டாசு தயாரிக்க ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்யும் போது அவை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் பட்டாசு தயாரிப்பு அறை ஒன்று தரைமட்டமானது. அதில், அந்த கட்டிடத்திற்குள் பணியில் இருந்த விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உரியிழந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், வெடிமருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.