பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீலம் அல்லது கருப்பு நிற மை கொண்ட பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பிற வண்ண பேனாவிலும், பென்சிலிலும் எழுதக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மே 5ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளை சேதப்படுத்த கூடாது என்றும் எந்த பக்கத்திலும் தேர்வு எண், பெயர் போன்றவற்றை எழுதக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வினா எண் எழுதாத அல்லது தவறான வினா எண் குறிக்கப்பட்ட விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.