மதுரை மருத்துவ கல்லூரியில் ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியை இணையத்தில் இருந்து தவறுதலாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் நேரமின்மை காரணமாக கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அதனை கவனிக்கத் தவறிவிட்டார் என்றும் மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர், மாணவர்கள் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க வேண்டும் என்பது சுற்றறிக்கையாக மட்டுமே அனுப்பட்டதாகவும் அது உத்தரவு அல்ல என்றும் நாராயணபாபு கூறினார்.