தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 5-ந் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-ந் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.