10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாளை மறுநாள் முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்து பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது என்றும் மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.