கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் மூதாட்டியிடம் தங்க செயின் பறிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில், இரு சக்கர வாகனத்தில் வந்த பிரசாந்த் என்ற இளைஞரிடம் இருந்து தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தான் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருவதாகவும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், நண்பர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித்தர தனது தோழியுடன் இணைந்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகவும் பிரசாந்த் கூறினார்.
இதனை அடுத்து, இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.