மாணவர் நலனுக்கெனப் பள்ளிக்கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் துணையுடன் மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு நடத்தப்படும்.
பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலை விழா, விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு அதில் சிறந்த மாணவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது.
மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்குத் தலைமையாசிரியரின் பரிந்துரையின்படி வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.