திருச்சி மாவட்டத்தில் விற்பனைக்காக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கிளிகள், முனியாஸ் குருவிகள் மீட்கப்பட்டு வனத்துறையின் பராமரிப்புக்கு பின் சுதந்திரமாக விடப்பட்டன.
திருச்சி பாலக்கரை, கீழப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கைகள் வெட்டப்பட்டு கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில், கிளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை மீட்ட வனத்துறையினர், மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து பராமரித்து வந்த நிலையில், தற்போது இறக்கை முழுமையாக வளர்ந்ததால் அதனை கூண்டில் இருந்து வெளியே விட்டனர்.
சிறகொடிந்த பறவைகள், சுதந்திரப் பறவைகளாக வானில் சிறகடித்து பறந்த காட்சிகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.