ரமலான் பெருநாளையொட்டித் தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இசுலாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனிதகுலச் சேவைக்கு நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இசுலாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவரிடமும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகளின் போதனைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.