இரண்டு வருடங்களாக மாணவர்கள் கல்வி கற்றல் இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் நட்புறவு குறித்த பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார்.