மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அவர் வசித்து வந்த சென்னை பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயரை 'சின்னக்கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும், திரையுலகினரும் அதே கோரிக்கையை முன்வைத்த நிலையில், விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.