சிவகங்கை அருகே திருமலையில் மடை கருப்பசாமி கோவிலில் ஆண்கள் பங்கேற்புடன் மட்டுமே நடைபெற்ற பாரம்பரிய சித்திரை திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று 325 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சித்திரை முதல் நாளில் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்கிய ஆண்கள் திருவிழாவின் 16-வது நாளான நேற்று அரிவாள், கருப்பு நிற ஆடுகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
மண்பானையில் பொங்கலிட்டு 325 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அவர்கள் பின்னர் பொங்கல், சமைத்த இறைச்சியை சுவாமி முன் வைத்து பூஜை நடத்தினர்.
தொடர்ந்து இரவு 1 மணியளவில் பல்லியின் அசரீரி கேட்டதும் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் கறிவிருந்து பரிமாறப்பட்டது. மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆண்கள் வந்து இதில் பங்கேற்றனர்.