தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மே 4ஆம் நாள் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவும் என்றும், இதனால் மே ஐந்தாம் நாள் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதையடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று மே 6ஆம் நாள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.