நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சப்பர ஊர்வலத்தில், சப்பரத்தின் சக்கரத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
அந்த கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சப்பர ஊர்வலம் நேற்றிரவு நடைபெற்றது.
தெற்கு வீதியில் சப்பரம் திரும்பும் போது சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபன்ராஜ் என்ற இளைஞர், சக்கரத்தில் சிக்கினார்.
சுமார் 60 அடி உயரம் கொண்ட சப்பரத்தின் சக்கரம் தீபன்ராஜ் வயிற்றில் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார்.
தேர் திரும்பும் போது நேராக செல்வதற்காக பக்கவாட்டு பக்கத்தில் முட்டுக்கட்டை போட்ட தீபன்ராஜ், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம், பொதுமக்களிடம் போலீசார் திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தீபன்ராஜ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.