கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரயில்களில் வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரயில் பயணம் பிடிக்கும் என்றும், ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும் என்றும் கமல் பதிவிட்டுள்ளார்.
தன் படங்களில் ரயில்கள் முக்கியமானவை என்றும் மூன்றாம் பிறை, மகாநதி, தேவர் மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ள கமல், தற்போது தமது படத்தை தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியை தருவதாகவும் கூறியுள்ளார்.