தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 31 நாட்களில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா மற்றும் 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறிப்பாக திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேப்போல், இந்த திட்டத்தின் கீழ் 6319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.90 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.