ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுமி, தந்தையின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டாள்.
செங்குந்தர் தெருவில் கழிவு நீர் கால்வாயை தூர்வார நகராட்சி பணியாளர்கள் குழி தோண்டிய நிலையில் தூய்மைப் பணி முடிந்து ஒரு வாரமாகியும் குழியை மூடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 வயது சிறுமி மித்ரா தன் தந்தை விவேக்குடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நிலையில் திடீரென குழியில் தவறி விழுந்தார்.
கண் முன்னே மகள் கழிவு நீர் கால்வாயில் விழுந்ததை கண்டு அதிர்ச்சியான விவேக் சட்டென கால்வாயில் குதித்து மகளை மீட்டார். சிறு காயங்களுடன் சிறுமி உயிர் தப்பிய நிலையில் இதுகுறித்து அளித்த புகாரில் ஊழியர்கள் குழியை மூடினர்.