திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பிடித்த அதிகாரிகள் அதில் இருந்த சுமார் ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக வந்த தகவலில் அடிப்படையில் யூனியன் மில் சாலையில் வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்திய அதிகாரிகள் அதை பறிமுதல் செய்ததுடன் லாரி ஓட்டுநருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.