முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஜூன் 24-க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்துள்ளதாகவும் நாளை முதல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளதாகவும் முன்னாள் நீதிபதி ஆறுமுசாமி தெரிவித்துள்ளார்.