சாதனையாளர்கள் பயின்ற அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து புத்துருவாக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள் படித்த அரசுப் பள்ளிகள் மற்றும் நூற்றாண்டுகள் கடந்து தற்போதும் பயன்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி நூலகங்களில் அரிய நூல்கள், சாதனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மின்னுருவாக்கம் செய்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சாதனையாளர்கள் பயின்ற அரசுப் பள்ளிகளின் விவரங்களை குறிப்புகளுடன் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.