கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோணம்காடு பகுதியை சேர்ந்த மரிய பிரான்சிஸ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள், 20ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
அதுபோல் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த மரியதாஸ் என்பவரின் வீட்டிலும் 30சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.