கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனங்காடு உருவாக்கும் திட்டத்திற்காக வனத்துறை மூலம் 55 ஆயிரம் பனை நாற்றுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இவை அனைத்தும் ஓசூர், சூளகிரி போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது 5 கோடியே 87 லட்சங்கள் பனை மரங்கள் உள்ளன. 30அடி உயரம் வரை வளரும் இந்த பனை மரங்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகள் ஆகும்.