ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்களை பயன்படுத்தி கரும்பு பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்த செயல் விளக்கம் தனியார் ஆலை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
பவர் ஸ்பேயரை பயன்படுத்தி கரும்பு பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் போது அதிகம் செலவாவதுடன் அதிக நேரமும் எடுத்துக்கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் கூறி வந்ததால் அவர்களிடம் கரும்புகளை கொள்முதல் செய்யும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். சொந்த செலவில் டிரோன்களை வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.