கொரோனா நான்காம் அலை இன்னும் தொடங்கவில்லை எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக இறப்பு இல்லை எனவும் தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.