ராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பல்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகுகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
காலையில் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து ஆந்திரா நோக்கியும், கோவாவில் இருந்து கொல்கத்தா நோக்கியும், வடக்கு கடல் பகுதியில் இருந்து கர்நாடகா நோக்கியும் என அடுத்தடுத்து 3 மிதவைக்கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. அவற்றைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட உள்ளூர் மீன்பிடி விசை படகுகள் அடுத்தடுத்து கடந்து சென்றன.