திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மின் வாரிய அலுவலகம் மீது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதால் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் மின்வாரிய ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.
ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல், படவேடு, தேவிகாபுரம், விண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 2 நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் மின் பாதை மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது.