கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம் 2ஆவது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றது.
மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. தியாகராய நகரிலுள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், விசாரணையில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், சசிகலா எந்த தயக்கமும் இன்றி பதிலளித்ததாக கூறினார். கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு எந்த தடையும் இல்லை எனவும் அவர் கூறினார்.