தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிக்க, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.