வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அவற்றையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25, 26 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.