சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்க திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமற்ற சூழல் இருப்பதால் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய பாமக எம்.எல்.ஏ., சதாசிவம், முதலமைச்சர் ஸ்டாலினை பெருந்தலைவர் காமராஜர் போன்று நினைப்பதாகவும், தனக்கு காரியம் நடக்க வேண்டும் என்பதால் அவரை புகழ்ந்து பேசியதாகவும் தெரிவித்தபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.