அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால் தான், அது மாற்றியமைக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததின் காரணமாகவும், டெண்டர் எடுக்க யாரும் முன்வராததாலும் தான் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் தங்கம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டதாக கூறினார். மேலும், திட்டத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாலிக்கு தங்கம் திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததாகவும், முழுமையாக பயனாளிகளை சென்றடையவில்லை எனவும் கூறியதோடு, அதனால் தான் மாற்றி அமைத்ததாகவும் தெரிவித்தார்.