மாணவர்கள், இளைஞர்கள் இடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், சென்னைக்கு அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது எனவும், விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னைக்கு அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிராமாண்ட மைதானம் அமைக்கப்படும் எனவும், சென்னை ஓபன் டென்னிஸ் தொடர், பீச் வாலிபால் போட்டிகளை மீண்டும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தா