5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் தன் மீது புகார் அளித்திருந்திருந்த நிலையில் நடிகர் விமல் அதனை மறுத்துள்ளார்.
மன்னர் வகையறா படத்திற்காக 5 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததுடன் தன் மீது பொய் புகார் அளித்ததாக விமல் மீது தயாரிப்பாளர் கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தான் இதற்கெல்லாம் காரணம் என நடிகர் விமல் தெரிவித்தார்.
யார் மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து இரு தரப்பு புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.